< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
திருவள்ளூர்: பெட்ரோல் பங்க் அருகே கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்து சேதம்

1 March 2023 4:46 PM IST
இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர், ஆவடி கவரப்பாளையத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளது.
பூனேவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த லாரி மீது மின்சார கம்பி அறுந்து விழுந்து தீப்படித்தது.
இதனால் லாரியில் கொண்டு வரப்பட்ட புதிய வகை இருசக்கர வாகனங்கள் தீயில் எறிந்து நாசம் ஆகியது. இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.