திருவள்ளூர்
ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.1¾ கோடி
|ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வசூலானது.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிருந்து வந்த லட்சக்கணக்காண பக்தர்கள் மலைக்கோவிலுக்கு காவடி எடுத்து வந்து காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்தினர்.
இந்த நிலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி திருத்தணி மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மூலம் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 7 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 57 ஆயிரத்து 307 பணமும், 544 கிராம் தங்கம், 13 ஆயிரத்து 544 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.