< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1½ கோடி வசூல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1½ கோடி வசூல்

தினத்தந்தி
|
18 Jun 2023 8:04 PM IST

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1½ கோடி வசூல் காணிக்கையாக கிடைத்தது.

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் அனைவரும் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 25 நாட்களில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரம் ரொக்கம் மற்றும் 795 கிராம் தங்கம், 14½ கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்