< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றுக- முதல் அமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை
|7 Oct 2022 7:35 PM IST
இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை அல்லது வைணவ சமய அறநிலையத்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜராஜசோழன் இந்து மதம் இல்லை என்றும், அந்த காலக்கட்டத்தில் சைவ மதம், வைணவ மதம் மட்டுமே இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.