தமிழ்நாட்டில் தேச விரோதிகள் தைரியமாக, துணிச்சலாக இருக்க திருமாவளவன், சீமான் தான் காரணம் - எச்.ராஜா காட்டம்
|தமிழ்நாட்டில் தேச விரோதிகள் தைரியமாக, துணிச்சலாக இருக்க திருமாவளவன், சீமான் தான் காரணம் என எச்.ராஜா கூறியுள்ளார்.
புதுச்சேரி,
தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறுகையில்,
தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள், தேச விரோதிகள், வன்முறைவாதிகள் தைரியமாக, துணிச்சலாக இருப்பதற்கு காரணம் திருமாவளவன், சீமான் போன்ற தீய சக்திகள் தான். அரசியலில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். கோவையில் போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அங்கு போலீஸ் நிலையத்துக்கு எதிரே எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ போராட்டம் நடத்தும் போது அவர்களுடன் இருப்பது விடுதலை சிறுத்தைகள். விடுதலை சிறுத்தைகளுக்கும், எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐக்கும் வித்தியாசம் இல்லை. எனவே, தமிழக அரசு அரசியல் ரீதியாக உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொய் செய்திகளை பரப்பும் திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர்களை வைத்து கடலூரில் கூட்டம் போட்டவர் தான் சீமான். நாட்டுக்கு விரோதமானவர் தான் சீமான்.
இவ்வாறு அவர் கூறினார்.