< Back
மாநில செய்திகள்
தி.மு.க. கூட்டணியில் திருமாவளவனுக்கு விருப்பமில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மாநில செய்திகள்

'தி.மு.க. கூட்டணியில் திருமாவளவனுக்கு விருப்பமில்லை' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தினத்தந்தி
|
27 Aug 2023 9:37 PM IST

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பலர் வெளியேறலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

பட்டியலின மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 8 மாதங்கள் உள்ள நிலையில், அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படலாம். பட்டியலின மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலை உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணியில் திருமாவளவனுக்கே விருப்பமில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பலர் வெளியேறலாம்" என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்