< Back
மாநில செய்திகள்
திருமாவளவன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

திருமாவளவன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
17 Aug 2024 10:54 AM IST

விசிக தலைவர் திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் 'எழுச்சித் தமிழர்' திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்