தூத்துக்குடி
திருச்செந்தூரில் திருமாவளவன் பிறந்த நாள் விழா:அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
|திருச்செந்தூரில் திருமாவளவன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி, தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் கலந்து கொண்டு திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதே போல் திருச்செந்தூரில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் மதிய உணவுகள் வழங்கினார். இதைதொடர்ந்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராசா, உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட்.ஜான்வளவன், திருச்செந்தூர் நகர பொருளாளர் தோப்பூர் சரண், விடுதலைக் கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தைசிவா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.