< Back
மாநில செய்திகள்
தளி சட்டமன்ற தொகுதியை  வன்கொடுமைகள் நிறைந்த பகுதியாக  அறிவிக்க வேண்டும்  தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தளி சட்டமன்ற தொகுதியை வன்கொடுமைகள் நிறைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

தளி சட்டமன்ற தொகுதியை வன்கொடுமைகள் நிறைந்த பகுதியாக முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று தேன்கனிக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.கூறினார்.

தேன்கனிக்கோட்டை:

தளி சட்டமன்ற தொகுதியை வன்கொடுமைகள் நிறைந்த பகுதியாக முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று தேன்கனிக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.கூறினார்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 9 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளை சாதிய வன்கொடுமைகள் நிறைந்த பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் நேற்று மாலை தேன்கனிக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

வன்கொடுமை தடுப்பு சட்டம்

தளி சுற்றுவட்டார பகுதிகளில் 9 பேர் படுகொலையில் கொலையாளிகள் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார இழப்பீடு வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு

கடந்த 2001-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்த போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்டு மற்ற அதிகாரிகளுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொலை குற்றம் என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். ஆனால் நடுநிலையாக இருக்காமல் கொன்றவர்கள் தனது சாதியா என்று பார்த்து காப்பாற்ற பலர் நினைக்கிறார்கள். இந்த பகுதியில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. ஒரு ஆண்டில் 9 தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கொலை செய்யப்பட்டுள்ள தளி சட்டமன்ற தொகுதியை வன்கொடுமைகள் நிறைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

அதற்காகவே தனி கோர்ட்டு உள்ளது. அதே போல கொலையானவர்களின் 9 பேரின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட 9 பேரின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

இதில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் குபேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்