< Back
மாநில செய்திகள்

திருப்பூர்
மாநில செய்திகள்
உலகேஸ்வரசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம்

26 Jun 2023 9:46 PM IST
உலகேஸ்வரசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.
ஆனி திருமஞ்சனம் அலங்காரத்தில் நடராஜர் -சிவகாமியம்மன்
சிவாலயங்களில் உள்ள நடராஜர் - சிவகாமியம்மனுக்கு ஆண்டு தோறும் 6முறை அபிஷேக பூஜைகள் நடைபெறும். சித்திரை மாதம் திருவோணம், ஆனி மாதம் உத்திரம், மார்கழி -திருவாதிரை, ஆகிய நட்சத்திர நாட்களிலும் ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் சதுர்த்தி நாட்களிலும் மகா அபிஷேகம் நடைபெறும். அதன்படி ஆனி திருமஞ்சனம் நிகழ்வு திருப்பூர் கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அல்லாளபுரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வரசுவாமி கோவிலில் நடந்தது. 16 வகையான திரவியங்களைக் கொண்டு நடராஜர்- சிவகாமியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.