கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர் அக்பர் அலி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை இயக்க தொடக்க நிகழ்ச்சி
|திருக்கோவிலூர் அக்பர் அலி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் வடக்கு வீதியில் செயல்பட்டு வரும் அக்பர் அலி மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி டாக்டர் அன்சாரி ராஜா தலைமையில் நடைபெற்றது. டாக்டர் ஆயிஷா சித்திக்கா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவிமுருகன் கலந்து கொண்டு ரத்ததான முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ரத்த சேவை வங்கியை தொடங்கி வைத்தார். மேலும் திருக்கோவிலூரில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதிநவீன கால்போஸ்கோபி கருவியை திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா தொடங்கி வைத்தார். விழாவில் நகர முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அக்பர் அலி மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.