< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
20 July 2023 2:05 PM IST

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.

ஆடிப்பூர திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உலக புகழ்பெற்ற சிவதலமாகும். 1,500 ஆணடுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற சிவ தலமாகும் மலைக்கோவிலில் வேதகிரீஸ்வரரும் தாழக்கோவிலில் திரிபுரசுந்தரி அம்மனும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் ஆடிப்பூர திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திரிபுரசுந்தரி அம்பாள் உற்சவமூர்த்திகள் புஷ்ப அலங்காரத்தில் ஏழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் மாடவீதிகளை சுற்றி வீதி உலா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. திரிபுரசுந்தரி அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து நான்கு மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்