< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
விஸ்வநாதசாமி கோவிலில் திருக்கல்யாணம்
|11 July 2023 2:21 AM IST
கும்பகோணம் விஸ்வநாதசாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஸ்வநாதசாமி கோவில் உள்ளது. கும்பகோணத்தில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் விசாலாட்சி அம்பிகைக்கும், விஸ்வநாதசாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.