ராமநாதபுரம்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்
|விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப்பூர் விநாயகர் கோவிலில் நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
ஆர்.எஸ்.மங்கலம்
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப்பூர் விநாயகர் கோவிலில் நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 10-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் தினமும் விநாயகர் சிம்ம, மயில், யானை வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருக்கல்யாணம்
இதனிடையே திருவிழாவின் 6-வது நாளான நேற்று விநாயக பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
18-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.