< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
|16 Oct 2023 12:15 AM IST
வேளாங்கண்ணி அருகே சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கன்னித்தோப்பில் சவுந்தரராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி சவுந்தரராஜப்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஹோமங்கள், காப்புகட்டுதல், வஸ்திரம் சாத்துதல் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசை எடுத்துவர பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.