விருதுநகர்
சொக்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
|விருதுநகர் சொக்கநாத சுவாமி ேகாவிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் சொக்கநாத சுவாமி ேகாவிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
விருதுநகரில் பழமை வாய்ந்த மீனாட்சி, சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவினை முன்னிட்டு தினமும் அன்னம், குதிரை, யானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடைபெற்றது.
தேரோட்டம்
திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி, அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை தேரோட்டம் நடைபெறுகின்றது. வருகிற 31-ம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பிரம்மோற்சவ அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.