< Back
மாநில செய்திகள்
பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
திருவாரூர்
மாநில செய்திகள்

பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
24 March 2023 12:15 AM IST

சீதக்கமங்கலம் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசித்திபெற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத ரேவதி நட்சத்திரத்தன்று திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று நடந்தது. காலை 8 மணி முதல் ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூமி தேவிக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவையொட்டி காலை 11 மணிக்கு கோவில் அர்ச்சகர் ரவிச்சந்திர பட்டாச்சாரியார் தலைமையில் விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி பூஜை, நடைபெற்று. தொடர்ந்து பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவிக்கு மலர் மாலை அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கங்காதரன், ரங்கநாத பெருமாள் உற்சவ கமிட்டி தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்