< Back
மாநில செய்திகள்
கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் திருக்கல்யாணம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
20 March 2023 1:24 AM IST

கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் திருக்கல்யாணம்

கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவில் பழமையான வைணவ தலம் ஆகும். பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் பங்குனி திருவோணத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு சக்கரபாணிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சீர்வரிசை கொண்டு சமர்ப்பித்தல், மாலை மாற்றும் வைபவமும், நலுங்கு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அக்னி வளர்க்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்