மதுரை
ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
|சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
சோழவந்தான்,
சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து 4 ரத வீதிகளில் வலம் வந்து கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தை அடைந்தனர்.இங்கு ஜெனகநாராயண பெருமாளும், ஸ்ரீதேவி, பூதேவி மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். யாகவேள்வி நடந்தது. சீதாராமன்பட்டர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.இதைத் தொடர்ந்து ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர் முரளிதரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது. நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடந்தது. இதே போல் குருவித்துறை சித்தர் ரத வல்லப பெருமாள் கோவிலிலும், சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகாவிஷ்ணுக்கும் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சோழவந்தான் ரவுத்து நாயக்கர் தெருவில் உள்ள கொண்டல் ராவத் நவநீதகிருஷ்ணாநந்த பஜனை குழுவினர் பூங்காவனம் தலைமையில் நகரில் உள்ள வீதிகளில் பக்தி பாடல் பாடி ஆடி வந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.