நாகப்பட்டினம்
தேவபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
|தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூரில் மதுரபாஷினி அம்மன் சமேத தேவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது. இதை இரவில் தேவபுரீஸ்வரர் - மதுரபாஷினி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் கொடி மரத்தடியில் இருந்து ஏராளமான பெண்கள் பழங்கள், மஞ்சள், குங்குமம் இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை சீர் வரிசை எடுத்து வந்தனர். தேவபுரீஸ்வரர் சாமி, மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. பின்னர் மதுரபாஷினி அம்மன் சன்னதியில் தேவபுரீஸ்வரர் சாமிக்கும் மதுரபாஷினி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.