தஞ்சாவூர்
கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
|திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கிராமத்தில் முல்லைவனநாதர் உடனாகிய கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற சிவன் தலமான இக்கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். குழந்தை வரம் அருளி, கருவை காக்கும் அம்மனமாக இக்கோவிலில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் அருள்பாலித்து வருகிறார். குழந்தை வரம் வேண்டி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
திருக்கல்யாணம்
இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது. விழாவில் சாமி, அம்மன் வீதி உலா தினசரி நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் முல்லைவனநாதருக்கும், கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சாமி, அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அக்னி
ஹோமங்கள் வார்க்கப்பட்டு ஆகமவிதிகள்படி திருக்கல்யாணம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள்
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.