< Back
மாநில செய்திகள்
ராமர்-சீதா திருக்கல்யாணம்
மதுரை
மாநில செய்திகள்

ராமர்-சீதா திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
29 March 2023 12:11 AM IST

ராமர்-சீதா திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.

சோழவந்தான்,

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் பங்குனி 7-ம் நாள் திருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி ஏராளமான பெண்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாப்பிள்ளை, பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனகநாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம் எனக்கூறப்படுகிறது. ஆனால் நேற்று ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. இதனால் பக்தர்கள் இதுகுறித்து கோவில்அர்ச்சகரிடம் கேட்டனர். அதற்கு கோவில் ஆகம விதிப்படி ராமர் சீதா கல்யாணம்தான் நடைபெறும் என்று கூறினர். இதுகுறித்து செயல் அலுவலர் சுதா கூறியதாவது, இக்கோவில் கல்வெட்டில் ராமர் சீதா கல்யாணம் என்று இருப்பதால் இதற்கு முன்பு இருந்தவர்கள் இதை பற்றி தெரியாமலும், ராமர் சிலையை தூக்க முடியாததாலும் ஜெனக நாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி மூதேவி திருக்கல்யாணம் நடத்தி வந்துள்ளனர். கோவில் ஆகம விதிப்படி ராமர் சீதா கல்யாணம்தான் நடத்த வேண்டும். ஆகையால் தான் இன்று ராமர் சீதா கல்யாணம் நடைபெறுகிறது என்றார்.

இதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு அன்னதானம் மற்றும் திருமாங்கல்யம், தாம்பூலப்பை வழங்கப்பட்டது. இதில், உபயதாரர் சவுந்தரிஅம்மாள், லலிதாசங்கரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்