< Back
மாநில செய்திகள்
செஞ்சிக்கோட்டை  வெங்கட்ரமணருக்கு திருக்கல்யாண உற்சவம்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணருக்கு திருக்கல்யாண உற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
10 Oct 2022 12:15 AM IST

செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனா்.


செஞ்சி,

செஞ்சி கோட்டையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காலையில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது.

அங்கு வெங்கட்ரமணர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் எதிரெதிரே வைக்கப்பட்டு மாலை மாற்றுதல் பூ விளையாட்டு உள்ளிட்ட திருமண வைபோகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி இணைந்த வெங்கட்ரமணருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்க பூபதி, செயலாளர் ஸ்ரீபதி, வழக்கறிஞர் வைகை தமிழ்ச்செல்வன், தொழிலதிபர் கோபிநாத், பிருத்விராஜ், கவுன்சிலர் நெடுஞ்செழியன் மற்றும் சிவா, சீனு, சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்