< Back
மாநில செய்திகள்
கரிவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கரிவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

கந்தம்பாளையம் அருகே கரிவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தில் அமைந்துள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி கரிவரத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கணபதி தும்பிக்கை ஆழ்வார் மற்றும் பக்த ஆஞ்சநேயர் சாமிகளுக்கு அபிஷேகமும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. கரி வரதராஜ பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலை திருக்கல்யாணம் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு கரி வரதராஜ பெருமாள் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு திருக்கல்யாண பூஜை செய்யப்பட்ட மாங்கல்யம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரண்டு நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதியில் கரி வரதராஜ பெருமாள் வசந்தபுரம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் உற்சவருக்கு தேங்காய் பழம் வைத்து வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகாளை வசந்தபுரம் விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்