கடலூர்
விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்
|விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருத்தாசலம்,
விருத்தகிரீஸ்வரர்
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி விருத்தாம்பிகை அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்திகளான விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, விழா கொடியேற்றப்பட்டது.
23-ந்தேதி திருக்கல்யாவிருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்ணம்
11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. மேலும் 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தேரோட்டம், 22-ந் தேதி(சனிக்கிழமை) ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு, ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.