< Back
மாநில செய்திகள்
வேணுகோபாலசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

வேணுகோபாலசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
13 Jun 2023 12:15 AM IST

பெரியாமூர் வேணுகோபாலசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

செஞ்சி,

செஞ்சி அருகே பெரியாமூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு கலச ஸ்தாபனம், சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பெரியாமூர் ராஜாராம பாகவதர் குழுவினரின் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா கார்வண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்