< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
மேலச்சேரிமத்தலேசுவரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
|4 May 2023 12:15 AM IST
மேலச்சேரி மத்தலேசுவரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
செஞ்சி,
செஞ்சியை அடுத்த மேலச்சேரியில் உள்ள ஸ்ரீ பிரகன்நாயகி உடனுரை ஸ்ரீ மத்தலேசுவரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மத்தலேசுவரர் மற்றும் பிரகன் நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் மாலை மாற்றி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை செஞ்சி கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.