< Back
மாநில செய்திகள்
மத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா

தினத்தந்தி
|
1 Oct 2023 1:00 AM IST

மத்தூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

மத்தூர்:

மத்தூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் சாமிக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருமண பத்திரிக்கை அச்சடித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்று மொய் பணம் எழுதினர். பின்னர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

மேலும் செய்திகள்