< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில், போலீசார் சார்பில்சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில், போலீசார் சார்பில்சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 Jan 2023 12:15 AM IST

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் வேலூர் சாலையில் உள்ள மகாதேவ வித்யாலயம் பள்ளி வளாகத்தில் நடந்தது. திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பின் அவசியம், விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள், குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை குறித்து எடுத்து கூறினார். மேலும் சாலை விபத்து கவனக்குறைவால் ஏற்படுவதால் சாலை பாதுகாப்பை முறையாக கடைபிடிக்க பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என மாணவ, மாணவிகளை கேட்டுக்கொண்டார். இதில் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பள்ளி தாளாளர் ராஜா மற்றும் ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்