< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோடு நகராட்சி சார்பில்புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோடு நகராட்சி சார்பில்புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு

தினத்தந்தி
|
10 Jan 2023 12:15 AM IST

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மகாதேவ வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமை தாங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஆணையாளர் பேசுகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதை பெரியவர்களுக்கு மாணவர்கள் எடுத்து கூற வேண்டும். இதனை பெற்றோர், தெரிந்த அக்கம்பக்கத்தினரிடம் எடுத்து கூறி புகையில்லா போகி கொண்டாட வேண்டும். மேலும் நகராட்சி பணியாளர்களிடம் தேவையற்ற பொருட்களை ஒப்படைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். இதையடுத்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்