< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
9 Aug 2023 7:28 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

காலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு திருவிளக்கு பூஜையும் நடந்தது.

மேலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். சிலர் பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

மேலும் செய்திகள்