< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
|16 Aug 2023 12:15 AM IST
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, தேசப்பற்று பாட்டு போட்டி போன்றவற்றில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகையும், சான்றிதழ்களும் வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தேவராஜ், மாணவர் ரகுராமன், மாணவி ஐஸ்வர்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.