< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 13 பேர் கைது

23 Jun 2022 7:16 AM IST
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அகில இந்திய மாணவர் கழக மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர் பாலஅமுதன் ஆகியோர் தலைமையில் நேற்று கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் இருந்து அந்த 2 அமைப்பை சேர்ந்தவர்களும் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் நோக்கி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் செல்வதற்கு முன்பே அவர்களை தடுத்து நிறுத்தி 13 பேரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.