< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ் பழுதானதால் 1 மணி நேரம் பயணிகள் அவதி
|27 Jan 2023 3:09 AM IST
திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ் பழுதானதால் 1 மணி நேரம் பயணிகள் அவதியடைந்தனா்.
தாளவாடி
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று மதியம் திம்பம் மலைப்பாைதயின் 21-வது வளைவு அருகே சென்றபோது அரசு பஸ் திடீரென பழுதாகி நின்றது. டிரைவர் எவ்வளவோ முயற்சித்தும் பஸ்சை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. சாலையோரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை. இந்த நிலையில் 1 மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் பயணிகள் ஏறி சத்தியமங்கலம் சென்றனர். அரசு பஸ்சை இயக்க முடியாததால் 1 மணி நேரம் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், 'மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்களை நல்ல தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.