< Back
மாநில செய்திகள்
திருடி செல்லும்போது பின்னால் திரும்பி சிரித்ததால் சிக்கிய திருடர்கள்..!
மாநில செய்திகள்

திருடி செல்லும்போது பின்னால் திரும்பி சிரித்ததால் சிக்கிய திருடர்கள்..!

தினத்தந்தி
|
22 May 2023 2:43 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, எல்இடி டிவியை திருடிச் சென்று, ஏரியில் குதித்து தப்ப முயன்ற கொள்ளையர்களை, போலீசார் சாதூர்யமாக செயல்பட்டு கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, எல்இடி டிவியை திருடிச் சென்று, ஏரியில் குதித்து தப்ப முயன்ற கொள்ளையர்களை, போலீசார் சாதூர்யமாக செயல்பட்டு கைது செய்தனர்.

பெரியபாளையம் அடுத்த கற்குழி பகுதியில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சதாம் என்பவர் மின்சாதன பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். வாடிக்கையாளருக்கு வழங்குவதற்காக, எல்இடி டிவி ஒன்றை தனது நண்பர் உதவியுடன் எடுத்துச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர்களை வழிமறித்து, எல்இடி டிவியை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை செய்த போலீசார், கொள்ளையர்கள், அருகில் உள்ள ஏரியில் இருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஏரியில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்ததுடன், எல்இடி டிவியையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான இருவரும் மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜதுரை மற்றும் தாணிப்பூண்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என தெரியவந்தது.

மேலும் செய்திகள்