< Back
மாநில செய்திகள்
தேர்தல் வருவதால் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர் - கனிமொழி எம்.பி. விமர்சனம்
மாநில செய்திகள்

'தேர்தல் வருவதால் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர்' - கனிமொழி எம்.பி. விமர்சனம்

தினத்தந்தி
|
9 March 2024 3:59 PM IST

பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி,

தேர்தல் வருவதால் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"சிலிண்டர் விலையை எப்பொழுதோ குறைத்திருக்க முடியும். ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். அதுவும் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்