< Back
மாநில செய்திகள்
முடி வெட்டாமல் ஸ்டைலாக வந்தார்கள்: பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு முடிதிருத்தம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

முடி வெட்டாமல் ஸ்டைலாக வந்தார்கள்: பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு முடிதிருத்தம்

தினத்தந்தி
|
12 July 2023 1:45 PM IST

ஆசிரியர்கள் பல முறை வலியுறுத்தியும் முடி வெட்டாமல் ஸ்டைலாக வந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் கே.எல்.கே. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடை மற்றும் சிகை அலங்காரம் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவறுத்தி இருந்தனர்.

இதை காதில் வாங்காமல் சில மாணவர்கள் தங்களது முடி அலங்காரத்தை மாற்றி கொள்ளாமல் ஸ்டைலாக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். இவற்றை கவனித்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொந்த செலவில் முடிதிருத்தம் செய்ய முடிவு செய்தனர்.

இதனையடுத்து தலைமையாசிரியர் ராமமூர்த்தி, நேற்று ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று சகிக்க முடியாத சிகை அலங்காரத்துடன் இருக்கும் 100 மாணவர்களை தேர்வு செய்தார்.

பின்னர் முடி வெட்டாமல் ஸ்டைலாக வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து முடிதிருத்தம் செய்ய ஒப்புதல் பெற்றார். தொடர்ந்து சலூன் கடைகாரர் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்யபட்டது. ஆசிரியர்கள் பல முறை வலியுறுத்தியும் முடி வெட்டாமல் ஸ்டைலாக வந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம் செய்யப்பட்ட சம்பவம் பள்ளி வளாகத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்