< Back
மாநில செய்திகள்
விவசாயி வீட்டின் உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள் கொள்ளை
கரூர்
மாநில செய்திகள்

விவசாயி வீட்டின் உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
7 Oct 2023 12:06 AM IST

கரூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள் கொள்ைளயடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

25 பவுன் நகைகள் கொள்ளை

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பாரிநகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் நல்லாயி அண்ணன் (வயது 67). விவசாயி. இவர் அப்பகுதியில் சொந்தமாக சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நல்லாயி அண்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அலமாரியில் அவர் வைத்திருந்த 25 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து நல்லாயி அண்ணன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ேபாலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இதையடுத்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்