சேலம்
வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த 2 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
|வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த 2 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடசென்னிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55), ஓய்வுபெற்ற ராணுவவீரர். கடந்த 2016-ம் ஆண்டு இவரது வீட்டில் யாரும் இல்லாதபோது, வீடு புகுந்து மர்ம நபர்கள் 28 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கொள்ளையில் ஈடுபட்டது, காட்டுக்கோட்டை ஆயர்பாடியை சேர்ந்த கார்த்திக் (37), காட்டுக்கோட்டை நேரு நகரை சேர்ந்த சுரேஷ் (49) என தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 பவுன் நகையும், ½ கிலோ வெள்ளி பொருட்களும் மீட்கப்பட்டன. இந்த வழக்கு ஆத்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக், சுரேஷ் ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு முனுசாமி தீர்ப்பு கூறினார்.