"என்னை பற்றி இழிவாக வதந்திகளை பரப்புகிறார்கள்" - ஸ்ரீமதி தாய் ஆவேசம்...!
|என்னை பற்றி இழிவாக வதந்திகளை பரப்புகிறார்கள் என ஸ்ரீமதி தாய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
ஸ்ரீமதி கடந்த 12-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். எங்களுக்கு 13-ம் தேதி அதிகாலை தான் தெரிவித்தனர். இது திட்டமிட்ட கொலை. மர்மமான முறையில் உள்ளது. இந்த கொலைக்கு எங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது. இந்த கொலையை மறைக்க, எங்களுக்கு எதிராக பள்ளி நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஒரு குறிப்பி யூடியூப் சேனல் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், உண்மைகளை மறைக்கும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது.
தற்போது அவர்கள், என்னை பற்றி இழிவாக வதந்திகளை பரப்புகிறார்கள். ஏற்கெனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கிறோம். இந்த பதிவு எங்களுக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்ய கோரி டிஜிபி அவர்களிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.