< Back
மாநில செய்திகள்
கெங்கையம்மன் கோவிலில் தேரோட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

கெங்கையம்மன் கோவிலில் தேரோட்டம்

தினத்தந்தி
|
8 Jun 2022 10:35 PM IST

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 7-ந் தேதி இரவு புஷ்ப பல்லக்கில் கெங்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து 8-ந் தேதி காலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிரசு ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீர்மோர், அன்னதானம்

கெங்கை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி சத்துவாச்சாரி பகுதி முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. ஏராளமான கடைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

இந்த திருவிழாவையொட்டி சர்வீஸ் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

மாலையில் காகிதப்பட்டறை பகுதியில் இருந்து உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக்கொண்டு கொக்கல கட்டையில் நின்றவாறு தாரை தப்பட்டையுடன் அணிவகுத்தவாறு வந்தனர். இதனால் சத்துவாச்சாரி பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

திருப்பி விடப்பட்டன

பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு பேரி கார்டுகள் வைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்