கரூர்
கரூர்-புகழூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
|கரூர்-புகழூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார்நகர், ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவைரோடு, வடிவேல்நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புகழூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினிேயாகம் பெறும் தவிட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், நொய்யல், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.