< Back
மாநில செய்திகள்
அமலாக்கத்துறை சோதனைக்கு முகாந்திரம் இருக்கும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை சோதனைக்கு முகாந்திரம் இருக்கும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தினத்தந்தி
|
17 July 2023 9:11 AM IST

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

சென்னை,

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மத்திய பாதுகாப்புப் படையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "அமலாக்கத்துறை சோதனைக்கு முகாந்திரம் இருக்கும். ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். அமலாக்கத்துறையின் சோதனை இறுதியிலே முழு விவரம் தெரியவரும். பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டத்திற்கும், அமலாக்கத்துறை சோதனைக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறினார்.



மேலும் செய்திகள்