< Back
மாநில செய்திகள்
ஆலயம் அருகே கிறிஸ்தவர்கள் திரண்டதால் பரபரப்பு
திருச்சி
மாநில செய்திகள்

ஆலயம் அருகே கிறிஸ்தவர்கள் திரண்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
6 Jan 2023 2:01 AM IST

ஆலயம் அருகே கிறிஸ்தவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்மலைப்பட்டி:

திருச்சி மாநகராட்சி 48-வது வார்டில் ஜி கார்னர் மைதானத்தையொட்டி புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாக சுப்பிரமணியபுரத்தில் உள்ள கிறிஸ்தவ மக்கள் தினமும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆலயம் ரெயில்வேக்கு சொந்தமான ஜி.கார்னர் மைதானத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, ஆக்கிரமிப்பை அகற்ற ரெயில்வே துறையினர் நேற்று காலை வருவதாக கூறியிருந்தனர்.

இதையடுத்து நேற்று ஜான் பிரிட்டோ ஆலய பங்குத்தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் புனித செபஸ்தியார் ஆலயம் அருகே ஒன்று திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்த 48-வது வார்டு கவுன்சிலர் தர்மராஜ் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்ற வருவதாக கூறிய ரெயில்வே துறையினர் வரவில்லை. இதையடுத்து அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்துவிட்டு, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்