< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்துவிட்டு மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விஷம் குடித்துவிட்டு மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 12:04 AM IST

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விஷம் குடித்துவிட்டு மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே உள்ள கடுக்காய் வலசை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை என்பவரின் மனைவி மகேசுவரி (வயது 36). இவரது 2-வது கணவரான தங்கதுரை இவரிடமிருந்து 12 பவுன் நகை மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டாராம். இதனால் தனது மகளை படிக்க வைக்கவும் வளர்க்கவும் சிரமம் அடைந்து வருகிறாராம்.

இதை தொடர்ந்து தனது கணவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பெற்று தரக்கோரி ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நேற்று வீட்டில் விஷம் குடித்துவிட்டு ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மகேசுவரி வந்தார். அங்கே திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விஷம்குடித்து மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்