< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
|11 Aug 2023 1:41 AM IST
வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள பிச்சைரெட்டியபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது வீட்டின் கான்கிரீட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து, அதில் சமையல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவரது மனைவி சமையல் செய்தபோது, கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, அதில் தீப்பற்றியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்து, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம், பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். இருப்பினும் சிறிது நேரத்தில் குடிசை முழுவதுமாக எரிந்ததுடன், அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.