< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மது பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு
|15 Aug 2023 12:47 AM IST
மது பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்த பொதுமக்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆண் ஒருவர் மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் சோதனை செய்ய முயன்றபோது அவர் ஏற்கனவே மது குடித்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில மது பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதையில் இருந்த அந்த நபரை போலீசார் எச்சரித்து கலெக்டர் அலுவலகத்தை விட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.