< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
மின்கம்பி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|8 Sept 2022 12:21 AM IST
திண்டிவனத்தில் மின்கம்பி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் நேற்று இரவு மழை பெய்தது. அப்போது நேரு வீதியும், ஆர்.எஸ்.பிள்ளை வீதியும் சந்திக்கும் பகுதியில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின்கம்பி திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அருகில் சென்று கொண்டிருந்த கேபிள் ஒயருக்கும் பரவி எரிந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.