திருவண்ணாமலை
பொதுமக்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
|சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை தாலுகா சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோ. கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக் கோரி கடந்த 29-ந் தேதி முதல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 5-வது நாளாக இன்றும் இப்போராட்டம் நடைபெற்றது.
அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வீடுகள் இடிக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.