< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் பாடநூல் வழங்குவதில் தாமதம் கூடாது - டாக்டர் ராமதாஸ்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் பாடநூல் வழங்குவதில் தாமதம் கூடாது - டாக்டர் ராமதாஸ்

தினத்தந்தி
|
8 July 2022 12:43 PM IST

அரசு பள்ளியில் பாடநூல் வழங்குவதில் தாமதம் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 60 சதவீதம் மட்டுமே பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டுப் புத்தகம், சீருடைகள் ஆகியவை யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

மாணவர்களுக்கு 3 கோடி குறிப்பேடுகள் அச்சிட ஆணை வழங்கப்பட்டு, அவற்றில் 75 சதவீத அச்சிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டும் அவை இன்னும் வழங்கப்படவில்லை. பாடநூல்களும், குறிப்பேடுகளும் இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது

கற்றலின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் கூட பள்ளிக் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்களும், குறிப்பேடுகளும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்